தி.மு.க மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: 6 தீர்மானங்கள் நிறைவேற்றம்

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று தி.மு.க மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம்…

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று தி.மு.க மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற கூட்டத்தின் முடிவில் 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தமிழகமெங்கும் மக்கள் கிராம சபை கூட்டங்களை வெற்றிகரமாக நடத்திய நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. தமிழக அரசில், ஊழல் புரையோடி உள்ளதாகக் கூறி, அதற்கு கண்டனம் தெரிவித்து மற்றொரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகளை தாமதமின்றி கைது செய்ய வேண்டும் என்றும் 3 வேளாண் சட்டங்களையும் மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் தி.மு.க மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply