மதுக்கடையில் இனி ரசீது வழங்க வேண்டும்: உயர்நீதிமன்ற மதுரை கிளை

தமிழகத்தின் அனைத்து அரசு மதுபானக் கடைகளிலும் வாங்கும் மதுவிற்கு உரிய ரசீது வழங்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக தொடரப்பட்ட பொதுநல வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆனந்தி…

தமிழகத்தின் அனைத்து அரசு மதுபானக் கடைகளிலும் வாங்கும் மதுவிற்கு உரிய ரசீது வழங்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக தொடரப்பட்ட பொதுநல வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆனந்தி அமர்வு, மதுபானங்கள் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு விற்கப்படுவதாக தொடர்ச்சியாக புகார்கள் எழுந்து வருகின்றன. எனவே மதுபானகடையின் முன்பு விலைப்பட்டியல் அடங்கிய தகவல் பலகை வைக்க வேண்டும், ரசீது வழங்கியதற்கான நகல் கொண்ட பதிவேடும் முறையாக பின்பற்றப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

நகல் பதிவேடு முறையாக பராமரிக்கப்படாத பட்சத்தில் சம்மந்தபட்டஅதிகாரிகள்மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் இது தொடர்பாக, டாஸ்மாக் மேலாண் இயக்குநர் சுற்றறிக்கை அனுப்பவும், உத்தரவிட்டனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply