இலங்கை கடற்படை தாக்குதலில் உயிரிழந்த புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த 4 மீனவர்களின் குடும்பத்துக்கும் தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை சிதைக்கும் இலங்கை கடற்படையின் செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். மீனவர்களின் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள முதலமைச்சர் பழனிசாமி, பொது நிவாரண நிதியில் இருந்து ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 10 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
உயிரிழந்தோரின் குடும்பத்தில் ஒருவருக்கு தகுதி அடிப்படையில் அரசு வேலை வழங்கப்படும் என்றும் அவர் உறுதி அளித்துள்ளார். மேலும், இந்த தாக்குதலில் சேதமடைந்த விசைப்படகுகளுக்கு அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு உரிய நிவாரணம் வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.







