முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 15ம் தேதி திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்!

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 15ம் தேதி நடைபெற உள்ளது.

தமிழக சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் முழு முனைப்புடன் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. ஆளும் கட்சியான திமுக, கடந்த ஓராண்டுக்கு முன்னரே பூத் கமிட்டி அமைத்தல், கட்சி உறுப்பினர்கள் சேர்க்கையை அதிகரிக்கும் நிகழ்வுகள், உடன்பிறப்பே வா என கட்சியினரை ஒருங்கிணைக்கும் நிகழ்வுகளை நடத்தி வருகிறது.

இந்த நிலையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 15ம் தேதி நடைபெற உள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரை முருகன் அறிவித்துள்ளார். இது தொடர்பாக வர வெளியிட்டுள்ள அறிவிப்பில், “சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. வரும் சட்டசபை தேர்தல் தொடர்பாக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.