முக்கியச் செய்திகள் தமிழகம்

டிச.1ம் தேதி திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் – துரைமுருகன் அறிவிப்பு

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் டிசம்பர் 1ஆம் தேதி நடைபெறும் என திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம் வருகிற 01-12-2022 வியாழக்கிழமை காலை 10.30 மணி அளவில், சென்னை, அண்ணா அறிவாலயம், “கலைஞர் அரங்கத்தில்” நடைபெறும். அதில் மாவட்டக் கழகச் செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இனமானப் பேராசிரியர் நூற்றாண்டு நிறைவு விழா என்ற பொருளில் நடைபெற உள்ள இந்த கூட்டத்தில் வாக்குச்சாவடி உறுப்பினர்கள், மகளிர், இளைஞரணி வாக்குச்சாவடி குழுக்கள் அமைப்பது குறித்து ஆலோசிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும், நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகும் வகையில் அறிவுறுத்தல்கள் வழங்கப்படவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் இந்தி திணிப்பு எதிர்ப்பு, மத்திய பாஜக அரசுக்கு எதிராக முன்வைத்து வரும் கருத்துக்களை மக்களிடம் கொண்டு செல்லும் வகையில் பரப்புரை மேற்கொள்ள மாவட்ட செயலாளர்களுக்கு திமுக தலைமை அறிவுறுத்தப்பட உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

மாரத்தானில் தொடர்ந்து பங்கேற்பது ஏன்? அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்

Halley Karthik

மீண்டும் சாம்பியன் பட்டம் வென்றது இந்தியா லெஜன்ட்ஸ் அணி

EZHILARASAN D

சென்னை புத்தகக் காட்சி: பெரியார், அம்பேத்கர் புத்தகங்கள் அதிக அளவில் விற்பனை

Arivazhagan Chinnasamy