முக்கியச் செய்திகள் இந்தியா தமிழகம் செய்திகள்

மனநலம் பாதிக்கப்பட்டு குணமடைந்த டெல்லி செவிலியர் – குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு

மனநலம் பாதிக்கப்பட்டு காணாமல்போன செவிலியருக்கு தென்காசி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் பூரண சிகிச்சையளித்து குடும்பத்தினருடன் அனுப்பி வைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியைச் சேர்ந்த செவிலியர் ரூபி என்பவர்   திருவனந்தபுரத்திற்கு நேர்முகத் தேர்வுக்காக வந்தபோது அவரது சான்றிதழ், உடைமைகளை தொலைந்து போனதால் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில், தென்காசி பேருந்து நிலையத்தில் சுற்றித்திரிந்துள்ளார்.பொதுமக்கள் அளித்த தகவலின்பேரில் மாவட்ட காவல்துறையினர் உதவியுடன் வடகரையில் உள்ள அன்பு மனநல காப்பகத்தில் அவர் சேர்க்கப்பட்டார். பின்னர் தென்காசி மாவட்ட தலைமை மருத்துவமனையில் மனநல சிகிச்சை அளிக்கப்பட்டு தற்போது நோயின் தாக்கம் முழுமையாக குணமடைந்த நிலையில், அவர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டார்.ரூபி அளித்த விலாசம், தொலைபேசி எண்ணை தொடர்பு டெல்லியில் இருந்து அவரது உறவினர்களை நேரில் வரவழைத்து அவர்களிடம் ரூபியை ஒப்படைத்தனர். உறவினர்களை கண்ட ஆனந்தத்தில் ரூபி கண்ணீர் மல்க மருத்துவத்துறை அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

பருவ மழையை சந்திக்க சென்னை தயாரா?

Gayathri Venkatesan

ராணிப்பேட்டை; அதிமுக தேர்தல் இடப்பங்கீடு வெளியீடு

G SaravanaKumar

“எல்.முருகனை மத்திய அமைச்சராக்கியது சமூக நீதி” – அண்ணாமலை

Halley Karthik