இங்கிலாந்து நாட்டின் 36 செயற்கைகோள்களை விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டம்

இங்கிலாந்து நாட்டின் ஒன்வெப் என்ற நிறுவனத்தின் 36 செயற்கைக் கோள்களை ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் மூலம் இஸ்ரோ விண்ணில் செலுத்த திட்டமிட்டள்ளது. அதற்காக 36 செயற்கைக்கோள்கள் இங்கிலாந்திலிருந்து இஸ்ரோவுக்கு வந்துள்ளது. இவற்றை வரும் 22…

இங்கிலாந்து நாட்டின் ஒன்வெப் என்ற நிறுவனத்தின் 36 செயற்கைக் கோள்களை ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் மூலம் இஸ்ரோ விண்ணில் செலுத்த திட்டமிட்டள்ளது.

அதற்காக 36 செயற்கைக்கோள்கள் இங்கிலாந்திலிருந்து இஸ்ரோவுக்கு வந்துள்ளது. இவற்றை வரும் 22 ஆம் தேதி விண்ணில் செலுத்தும் வகையில் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் GSLV Mk-III ராக்கெட் தயார்படுத்தப்பட்டு வருகிறது.

தற்போது செயல்பாட்டில் உள்ள பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் அதிகபட்சமாக 1,750 கிலோ எடை கொண்ட செயற்கை கோள்களை மட்டுமே விண்ணில் செலுத்த முடியும் என்பதால் இங்கிலாந்து நாட்டின் ஒன்வெப் என்ற நிறுவனத்தின் 36 செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்த 4 ஆயிரம் கிலோ வரையிலான செயற்கைக்கோள்களை ஏந்திச் செல்லும் ஜிஎஸ்எல்வி வகை ராக்கெட் பயன்படுத்தப்பட உள்ளது.

ஏற்கனவே இங்கிலாந்து நாட்டின் ஒன்வெப் நிறுவனத்துடன் இஸ்ரோவின் New Space India Limited நிறுவனம் 2 ராக்கெட் ஏவுதலுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. அதன்படி, முதற்கட்டமாக, ஒன்வெப் நிறுவனத்தின் 36 செயற்கைகோள்கள் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட் மூலம் அக்டோபர் 22ஆம் தேதி ஏவப்பட உள்ளன.

இதற்காக இங்கிலாந்தில் இருந்து ஒன்வெப் நிறுவன செயற்கைக் கோள்கள் ஸ்ரீஹரிகோட்டாவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. அவற்றை ராக்கெட் பாகத்துடன் பொருத்தும் பணிகள் தொடங்கி உள்ளன.

இதையடுத்து, 2 வது கட்டமாக, ஒன்வெப் நிறுவனத்தின் செயற்கைக் கோள் அடுத்த ஆண்டு 2023 ஜனவரி 23-ம் தேதி செலுத்தப்பட இருப்பதாகவும், இதற்கிடையில் 3 பிஎஸ்எல்வி ராக்கெட் ஏவுதல் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றும் இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.

 

-ஹரி நிஷாந்த்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.