முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

குஷ்பு பற்றி திமுக பிரமுகரின் அவதூறு பேச்சு – மன்னிப்பு கோரிய கனிமொழி

பாஜகவின் பெண் தலைவர்கள் குறித்து திமுக பிரமுகர் ஒருவர் அவதூறாக பேசியதற்கு, திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி மன்னிப்பு கேட்டுள்ளார்.

சென்னையில் திமுக நடத்திய கூட்டத்தில் அக்கட்சி பிரமுகர் பாஜக பெண் தலைவர்களைப் பற்றிய பேசியது சமூக வலைதளங்களில் வைரலானது. பாஜக நிர்வாகியும் நடிகையுமான குஷ்பு தனது ட்விட்டரில்,  இதுபற்றி திமுக துணை பொதுச் செயலாளர் கனிமொழியின் கவனத்திற்கு கொண்டு சென்றார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

கலைஞரைப் பின்பற்றுவதாகக் கூறிக்கொள்ளும் சிலர், பெண்களைப் பற்றி அவதூறாகப் பேசுவது சரியா என்றும், இது தான் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இயங்கும் திராவிட மாடலா என்றும் கேள்வி எழுப்பி இருந்தார்.

இதற்கு பதிலளித்த கனிமொழி, ஒரு பெண்ணாகவும், சக மனிதராகவும் தான் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக ட்விட்டரில் பதில் அளித்துள்ளார். கட்சி வேறுபாடு இன்றி இந்த செயலை ஏற்க முடியாது என குறிப்பிட்ட அவர்,  தனது கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், இத்தகைய தவறை பொறுத்துக்கொள்ள மாட்டார் எனவும் கனிமொழி குறிப்பிட்டார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

கச்சத்தீவு மீட்கப்படுமா?- மத்திய அரசு விளக்கம்

Web Editor

டெல்டாவில் கூடுதல் நெல் கொள்முதல் நிலையங்கள்: அமைச்சர் சக்கரபாணி!

Gayathri Venkatesan

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உருவாகிறது: மீனவர்களுக்கு எச்சரிக்கை

Halley Karthik