திமுக கவுன்சிலர் குடும்பத்தினர் அமைச்சர் காலில் விழுந்து கோரிக்கை

ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி திமுக கவுன்சிலர் வீரபத்திரன் குடும்பத்தினர் அமைச்சர் தாமோ அன்பரசன் காலில் விழுந்து கோரிக்கை வைத்தனர். காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வல்லக்கோட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திராவிட மாடல் பயிற்சி…

ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி திமுக கவுன்சிலர் வீரபத்திரன் குடும்பத்தினர் அமைச்சர் தாமோ அன்பரசன் காலில் விழுந்து கோரிக்கை வைத்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வல்லக்கோட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திராவிட மாடல் பயிற்சி பாசறை நடைபெற்றது. இதற்கு அமைச்சர் தாமோ அன்பரசன் தலைமை தாங்கினார் ஸ்ரீபெரும்புதூர் தொகுதிக்குட்பட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட திமுக இளைஞர் அணியினர் இதில் கலந்து கொண்டனர்.
அமைச்சர் தாமோ அன்பரசன் விழா முடிந்து கீழே இறங்கி வந்த போது ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி 11 வது திமுக கவுன்சிலர் வீரபத்திரனின் மனைவி தாய் சகோதரி மற்றும் வீரபத்திரன் குழந்தைகள் அமைச்சர் காலில் விழுந்து கோரிக்கை வைத்தனர்.


கடந்த ஏப்ரல் மாதம் கவுன்சிலர் வீரபத்திரன் மீது கொலைவெறி தாக்குதல் நடைபெற்றது இந்த சம்பவத்தில் 7 பேர் கைது செய்யப்பட்டு அதில் 3 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் உள்ளனர். ஆனால் முக்கிய குற்றவாளியான வழக்கறிஞர் மதன்ராஜை ஸ்ரீபெரும்புதூர் போலிசார் கைது செய்யவில்லை என்றும் மேலும் மதன்ராஜின் மனைவி காவல்துறையை சேர்ந்தவர் என்பதால் அவரின் தூண்டுதல் பேரில் தனது குடும்பத்தினர் மீது ஸ்ரீபெரும்புதூர் போலிசார் பொய் வழக்குகள் பதிவு செய்வதாகவும் கவுன்சிலர் வீரபத்திரன் தெரிவித்தார் .

இது குறித்து காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் பேசுவதாகவும் மேற்படி எந்த புகாரும் உங்கள் குடும்பத்தினர் மீது பதிவு செய்யப்படாது எனவும் உடல்நலத்தை பார்த்து கொள்ளும்படியும் அமைச்சர் அன்பரசன் கவுன்சிலர் வீரபத்திரனிடம் தெரிவித்தார். திராவிட மாடல் பயிற்சி பாசறை நடைபெற்ற நிகழ்ச்சியில் கவுன்சிலர் வீரபத்திரன் குடும்பத்தினர் கண்ணீர் மல்க அமைச்சர் காலில் விழுந்த சம்பவம் அக்கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

 

-பரசுராமன்.ப
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.