முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

வாக்கு எண்ணும் மையங்களில் திமுக நிர்வாகிகளை அனுமதிக்கக் கூடாது: அதிமுக

ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவில் முறைகேடு நடந்திருப்பதாக மாநில தேர்தல் ஆணையத்திடம் அதிமுக சார்பில் புகார் மனு வழங்கப்பட்டது.

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. முதல் கட்ட வாக்குப்பதிவு கடந்த 6 ஆம் தேதி நிறைவடைந்தது. இந்நிலையில் இன்று இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவில் முறைகேடு நடந்திருப்பதாக மாநில தேர்தல் ஆணையத்தில் அதிமுக சட்ட ஆலோசகர் பாபு முருகவேல் புகார் அளித்தார். வாக்கு எண்ணிக்கை நேர்மையாக நடைபெற வேண்டும் என வலியுறுத்தினார்.

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பாபு முருகவேல், ’ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பல்வேறு குளறுபடிகள் நடந்துள்ளன. 5 மாத கால ஆட்சியில் திமுக மக்களிடத்தில் செல்வாக்கை இழந்துள்ளது. இழந்த செல்வாக்கை மீட்க வாக்கு எண்ணிக்கையின் போது எந்த எல்லைக்கும் செல்வார்கள். ஆகவே வாக்கு எண்ணிக்கை நியாயமான முறையில் நடைபெற வேண்டும்” என்று குறிப்பிட்டார்.

வாக்கு எண்ணும் மையங்கள், வாக்குச்சீட்டுகள் வைக்கப்படும் அறை தொடர்ச்சியாக சிசிடிவி கேமரா மூலம் கண்காணிக்கப்பட வேண்டும்’என தெரிவித்த அவர் வாக்குப் பெட்டிகள் உள்ள அறைக்கு 3 அடுக்கு பாதுகாப்பு தர வேண்டும் என்றும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையங்களில் வெளியாட்கள், திமுக நிர்வாகிகளை அனுமதிக்கக் கூடாது எனவும் தெரிவித்தார். மேலும் வாக்கு எண்ணிக்கை முடிந்தவுடன், உடனடியாக வெற்றியை அறிவித்து சான்றிதழை வழங்க வேண்டுமெனவும் வலியுறுத்தினார்.

Advertisement:
SHARE

Related posts

பெண்கள் ஒரு நாள் கிரிக்கெட்: இங்கிலாந்து அணி அபார வெற்றி

Gayathri Venkatesan

மெக்சிகோ பெருங்கடலில் ஏற்பட்ட தீ விபத்து; எப்படி நடந்தது?

Ezhilarasan

ராமநாதபுரம்- தூத்துக்குடி இயற்கை எரிவாயு குழாய் வழிப்பாதையை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர்!

Nandhakumar