நவராத்திரியின் 9 நாட்களும் உடை கட்டுப்பாட்டை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் இல்லை என்றால் அபராதம் விதிக்கப்படும் என்றும் ’யூனியன் பாங்க் ஆப் இந்தியா’ அறிவுறுத்தி உள்ளதற்கு மதுரை எம்.பி., சு. வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள் ளார்.
இதுபற்றி ட்விட்டரில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:
’யூனியன் பாங்க் ஆப் இந்தியா’ மைய அலுவலகத்தில் உள்ள பொது மேலாளர் (நவீன மயம்) ஏ.ஆர்.ராகவேந்திரா என்பவர் இப்படி ஒரு சுற்றறிக்கையை கடந்த 1-ம் தேதி அன்று வெளியிட்டுள்ளார்.
நவராத்திரியின் ஒன்பது நாட்களும் உடை கட்டுப்பாட்டை கடைப் பிடிக்க வேண்டுமாம். விடுமுறை நாளாக இருந்தாலும் யார் இவருக்கு அதிகாரம் தந்தது? ஊழியர் விதிமுறைகளில் எந்த சரத்தின் கீழ் இந்த சுற்றறிக்கையை அவர் விடுத்துள்ளார்?
யூனியன் பாங்க் ஆப் இந்தியா பொது மேலாளர் நவராத்திரியின் ஒன்பது நாட்களும் ஒன்பது நிற உடைகளில் வர வேண்டுமென சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்?
யார் இவருக்கு அதிகாரம் தந்தது!
அடுத்தவரின் உரிமைகளில் தலையிடுகிற அத்து மீறல்.
உடனடியாக உத்தரவை திரும்பப்பெறு #UBI #Navarathiri pic.twitter.com/jm22BPzs8J
— Su Venkatesan MP (@SuVe4Madurai) October 9, 2021
நம்பிக்கை உள்ளவர்கள் நவராத்திரியை மகிழ்ச்சியோடு கொண்டாடுகிறார்கள். அது அவர்கள் விருப்பம். தனிப்பட்ட உரிமை. ஆனால் எல்லோரும் கொண்டாடியாக வேண்டும், இன்ன நிறத்தில் உடை உடுத்த வேண்டும் என்று கட்டாயப்படுத்துவது அதிகார மீறல். அடுத்தவரின் உரிமைகளில் தலையிடுகிற அத்துமீறல். நிதி அமைச்சகம், யூனியன் வங்கி சேர்மன் உடனடியாக தலையிட வேண்டும். சுற்றறிக்கை திரும்பப் பெறப்பட வேண்டும். சம்பந்தப்பட்ட அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.







