தஞ்சையின் வரலாற்று சிறப்பு வாய்ந்த புராதான சின்னங்களை வெளியுலகுக்கு தெரியப்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்க உள்ளதாக திமுக வேட்பாளர் நீலமேகம் உறுதி அளித்துள்ளார்.
சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெற இருக்கும் நிலையில், அனைத்து கட்சிகளும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன. அந்த நிலையில், தஞ்சை அரண்மனை மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் திமுக வேட்பாளர் எம் எல் ஏ நீலமேகம் தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், தஞ்சை என்பது சோழர்கள் சரபோஜி நாயக்க மன்னர்கள் ஆண்ட பகுதியாகும் எனக் கூறினார்.
தஞ்சையில் வரலாற்று சிறப்புமிக்க பெரியகோயில், சரஸ்வதி நூலகம் இருக்கிறது எனவும் இவ்வளவு சிறப்புமிக்க தஞ்சை மாநகரத்தை சிறந்த சுற்றுலா தலமாக உருவாக்கினால் புராதன சின்னங்கள் மேலும் உலகிற்கு தெரிய வரும் எனவும் கூறினார். இதனையடுத்து, தஞ்சை மாநகரத்தை சிறந்த சுற்றுலா தலமாக உருவாக்க நடவடிக்கை எடுப்பதாகவும் நீலமேகம் உறுதி அளித்துள்ளார்.







