திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம்; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தொடக்கம்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு அரசின் 2023-24 -ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனை மார்ச் 20ம் தேதி…

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்று வருகிறது.

தமிழ்நாடு அரசின் 2023-24 -ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனை மார்ச் 20ம் தேதி சட்டப் பேரவையில் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் பள்ளிக் கல்வித்துறை, இளைஞர் நலன், சுற்றுச்சூழல் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கான முக்கிய அறிவிப்புகள் வெளியாகின.

இதனைத் தொடர்ந்து இன்று திமுக அரசு பொறுப்பேற்றது முதல் மூன்றாவது முறையாக வேளாண் பட்ஜெட் 2023-24 தமிழ்நாடு சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. தமிழ்நாடு வேளாண்மைத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் பட்ஜெட்டை தாக்கல் செய்து சட்டப்பேரவையில் பட்ஜெட்டை வாசித்தார்.

இந்த நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் உள்ள  கலைஞர் அரங்கில் தொடங்கியது.

மாலை 5 மணிக்கு தொடங்கிய இந்தக்  கூட்டத்தில், சட்டமன்ற கூட்டத்தொடரில் எப்படி செயலாற்றுவது என்பது குறித்த அறிவுறுத்தல் வழங்கப்படுகிறது

மார்ச் 20ஆம் தேதி தொடங்கிய சட்டமன்ற கூட்டத்தொடர் ஏப்ரல் 21ஆம் தேதி வரை நடைபெறுகிறது மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்தில் கருத்துக்களை எப்படி முன் வைப்பது? புகழ்ச்சியை தவிர்த்து தொகுதி சார்ந்த கோரிக்கைகளுக்கு முன்வைக்க அறிவுறுத்தல்கள் வழங்குகப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்தில் பங்கேற்க வாய்ப்பில்லாதவர்களுக்கு அடுத்த முறை வாய்ப்பளிக்கப்படும் எனவும் துறை ரீதியாக தயாராகி எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு ஆணித்தரமான கருத்துகளை முன்வைக்க வேண்டும் என அமைச்சர்களுக்கு அறிவுறுத்தபட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://twitter.com/Udhaystalin/status/1638178102940680194

நாடாளுமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில், மக்கள் பணிகளில் தொடர் கவனம் செலுத்தி குறைகளை கேட்டறிந்து, தீர்வு காணவும் அறிவுறுத்தப்படவுள்ளது.

யாழன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.