’தசரா’ படக்குழுவை சேர்ந்த 130 பேருக்கு, தலா 10 கிராம் தங்க நாணயங்களை நடிகை கீர்த்தி சுரேஷ் பரிசாக வழங்கி உள்ளார்.
தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் பிஸியாக நடித்துக் கொண்டிருப்பவர் கீர்த்தி சுரேஷ். தற்போது தெலுங்கில் நடிகர் நானிக்கு ஜோடியாக தசரா படத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். இந்த படத்தை ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கியுள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வருகிற மார்ச் 30-ம் தேதி பான் இந்தியா படமாக வெளியாக இருக்கிறது.
இந்நிலையில் தசரா படம் கீர்த்தி சுரேஷுக்கு நெருக்கமான படமாக அமைந்துள்ளதாக திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்தப் படத்தில் வெண்ணிலா என்ற கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். மனதை கவர்ந்த கதாபாத்திரம் என்பதால், தசரா படத்துக்காக உழைத்த அனைவருக்கும் மறக்க முடியாத பரிசை கீர்த்தி சுரேஷ் வழங்கியுள்ளார்.
அண்மைச் செய்தி : கெளதம் கார்த்தி நடிக்கும் ‘ஆகஸ்ட் 16,1947’ படத்தின் டிரைலர் வெளியானது
படக்குழுவைச் சேர்ந்த 130 பேருக்கும் தலா 10 கிராம் தங்க நாணயத்தை கீர்த்தி சுரேஷ் பரிசாக வழங்கியுள்ளார். தற்போதைய தங்க விலையை கணக்கிட்டு பார்த்தால் கீர்த்தி சுரேஷ் கொடுத்துள்ள தங்க நாணயங்களின் மொத்த மதிப்பு 75 லட்ச ரூபாயாகும். சுமார் 75 லட்ச ரூபாய் மதிப்புள்ள பரிசை படக்குழுவுக்கு வழங்கியுள்ளது திரையுலகில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.







