உலக மகளிர் குத்துச்சண்டை போட்டியில் 2 இந்திய வீராங்கனைகள் அசத்தலாக விளையாடி காலிறுதிக்கு முன்னேற்றியுள்ளனர்.
13வது உலக மகளிர் குத்துச்சண்டை போட்டி டெல்லியில் இன்று கடந்த 15ம் தேதி தொடங்கி மார்ச் 26 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி டெல்லியில் உள்ள இந்திரா காந்தி ஸ்போர்ட்ஸ் காம்ப்ளக்சில் நடைபெற்று வருகிறது.
கடந்த 2006 மற்றும் 2018ஆம் ஆண்டுக்கு பிறகு உலக மகளிர் குத்துச்சண்டை போட்டி இந்தியாவில் நடப்பது இது மூன்றாவது முறையாகும். உலக மகளிர் குத்துச்சண்டை போட்டியில் இந்தியா சார்பில் 12 வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
ஒலிம்பிக்கில் வெங்கலம் வென்ற லவ்லினா, நிகாத் ஹரின், நீது, மனீஷா உள்ளிட்ட 12 இந்திய வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். 74 நாடுகளை சேர்ந்த வீராங்கனைகள் பங்கேற்க உள்ள நிலையில், இந்தியா சார்பில் 12 வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மகளிர் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய நட்சத்திர குத்துச்சண்டை வீராங்கனை நிகாத் ஜரீன் மற்றும் அல்ஜீரியா வீராங்கனையான பவுலாம் ரூமைசாவை வீழ்த்தி காலிறுதி தகுதிப் போட்டியில் இடம் பெற்றார். இதனையடுத்து இன்று நடந்த போட்டியில் நிகாத் ஜரீன் மெக்சிகோ வீராங்கனையான ஹெரீரா அல்வாரெஸ் ஃபாத்திமாவை 5-0 என்ற கணக்கில் வீழ்த்தி காலிறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார்.
இதேபோல இந்திய வீராங்கனையான மனிஷா மவுனும் (57 கிலோ) ஆஸ்திரேலியாவின் ரஹிமி டினாவுக்கு எதிராக 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று 16-வது சுற்றுக்கு முன்னேறிய நிலையில் இன்று நடந்த போட்டியில் மனீஷா துருக்கி வீராங்கனையான நூர் எலிஃப் துர்ஹானை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
இதன் மூலம் இந்திய வீராங்கனையான நிகாத் ஜரீன் மற்றும் மனிஷா மவுன் ஆகியோர் காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.
– யாழன்







