தேர்தல் வாக்குறுதிகள் என்ன ஆயிற்று? – சட்டப்பேரவையில் திமுக-அதிமுக விவாதம்

நடப்பு ஆண்டுக்கான சட்டப்பேரவை கூட்டம் நேற்று முன்தினம் ஆளுநர் உரையுடன் தொடங்கியது. இரண்டாம் நாளான நேற்று மறைந்த எம்எல்ஏக்கள் மற்றும் தலைவர்களுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டு, மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் நாள் முழுவதும்…

நடப்பு ஆண்டுக்கான சட்டப்பேரவை கூட்டம் நேற்று முன்தினம் ஆளுநர் உரையுடன் தொடங்கியது. இரண்டாம் நாளான நேற்று மறைந்த எம்எல்ஏக்கள் மற்றும் தலைவர்களுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டு, மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் நாள் முழுவதும் பேரவை ஒத்தி வைக்கப்பட்டது.

மூன்றாவது நாளாக சட்டப்பேரவை கூட்டம் இன்று காலை 10 மணிக்கு கூடியது. எதிர்க்கட்சி துணைத்தலைவர் விவகாரம் தொடர்பாக அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் கருப்பு சட்டை அணிந்து சட்டப்பேரவைக்கு வந்தனர்.

பின்னர் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கே.பி.முனுசாமி, குடும்ப தலைவிகளுக்கு  ஆயிரம் ரூபாய் தருவதாக தேர்தல் வாக்குறுதி கொடுத்தீர்களே அந்த தேர்தல் வாக்குறுதி என்ன ஆயிற்று ?  என திமுக உறுப்பினர்களிடம்  கே.பி முனுசாமி கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதலளித்த நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, 2016 இல் பெண்களுக்கு செல்போன் தருகிறேன் என்று சொன்னீர்களே இன்றுவரை கொடுத்துள்ளீர்களா? என கே.பி.முனுசாமியை பார்த்து கேள்வி எழுப்பினார்.

மீண்டும் பேசிய கே.பி.முனுசாமி, அனைவருக்கும் இரண்டு ஏக்கர் நிலம் தருவேன் என கருணாநிதி சொன்னாரே செய்தீர்களா? என மீண்டும் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த சபாநாயகர் அப்பாவு, கருணாநிதி சொன்னபடி 20 லட்சம் பேருக்கு இரண்டு ஏக்கர் நிலம் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

மேலும் திமுக தரப்பில் பேசிய அமைச்சர் ஐ.பெரியசாமி, நிலமற்ற ஏழைகளுக்கு அரசு நிலத்தை வழங்கியது திமுக அரசு.  பொதுமக்கள் நிலத்தை அபகரித்தது எந்த அரசு என்பது அனைவருக்கும் தெரியும் என்று பேசினார். மீண்டும் பேசிய கே.பி.முனுசாமி, நீட் தேர்வை ரத்து செய்வதாக செய்யும் பாக்கெட்டில் இருப்பதாக சொன்னீர்களே அந்த ரகசியம் என்ன ஆச்சு? என திமுக உறுப்பினர்களிடம் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் தங்கம் தென்னரசு, 100 கோடி ரூபாய் செலவில் தமிழ் தாய்க்கு சிலை வைப்பதாக சொன்னீர்களே செய்தீர்களா?எ என அதிமுக உறுப்பினர்களை பார்த்து கேள்வி எழுப்பினார். அதிமுக, திமுக ஆகிய இரு கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்களும் தேர்தல் வாக்குறுதிகள் குறித்து கேள்விகளை தொடர்ந்து எழுப்பினர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.