முக்கியச் செய்திகள் இந்தியா தேர்தல் 2021 செய்திகள்

அசாமில் பாஜக முன்னிலை

அசாம் மாநிலத்தில் பாஜக கூட்டணி முன்னிலை பெற்றுள்ளது.

தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் ஆகிய 5 மாநிலங்களிலும் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன.

126 சட்டப்பேரவை தொகுதிகளைக் கொண்ட அசாம் மாநிலத்தில், 3 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இதுவரை இல்லாத அளவில், அங்கு 80.04 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. 126 தொகுதிகளைக் கொண்ட அசாம் மாநிலத்தில் ஆட்சியமைக்க 64 இடங்களில் வெற்றி பெற வேண்டும். ஆளும் பாஜக கூட்டணிக்கும், எதிர்க்கட்சியான காங்கிரஸ் கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

கொரோனா பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 331 மையங்களில் அங்கு வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இங்கு பாஜக கூட்டணி அதிக இடங்களில் முன்னிலை வக்கிறது. இதையடுத்து பாஜக அங்கு மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று அம்மாநில முதல்வர் சர்பானந்தா சோனோவால் தெரிவித்துள்ளார்.

Advertisement:

Related posts

ஆக்சிஜன் சிலிண்டர் வெடிப்பு : 82 பேர் உயிரிழப்பு!

Ezhilarasan

2021-22 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் ஒரு ரூபாய்க்கான வரவு – செலவுகள்

Jeba

2020-ம் ஆண்டு 9,849 இணையதள கணக்குள் முடக்கம்!

Jeba