தமிழ்நாட்டை பொறுத்தவரை திமுக அதிமுக இடையே தான் போட்டி என்பது தமிழக மக்களுக்கு தெரியும் என கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன்
கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் தெரிவித்ததாவது..
திமுக தரப்பில் இருந்து நாடாளுமன்ற தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கவில்லை.திமுக கூட்டணி கட்சிகள் வேறு காரணத்திற்காக திமுகவை சந்தித்து வருகிறார்கள்.
மின் வாரியம் விதித்துள்ள பரபரப்பு கட்டணம் முறை சிறு குறு தொழில் நிறுவனங்களை பாதிக்கும் என்பதால் 24மணி நேரமும் செயல்படும் தொழில் நிறுவனங்களுக்கு பரபரப்பு கட்டணம் தேவையில்லாத ஒன்று இது குறித்து மின் வாரியத்திடம் வலியுறுத்தி உள்ளேன்
பாஜக அதிமுக கட்சிகளோடு திமுக கூட்டணியில் இருக்ககூடிய கட்சிகள் இணைவதற்கான வாய்ப்புகள் இல்லை என்றும் ஊடங்கள் வாயிலாக கருத்து வருகிறது. இதில் நடைமுறை சாத்தியமில்லை. தொகுதி பங்கீடு குறித்து பேச கால அவகாசம் உள்ளது
காவிரி விவகாரம் பல தலைமுறையாக உள்ளது, மேலும் இது அரசியல் சார்ந்த நடவடிக்கையாக உள்ளது.தேசிய கட்சிகள் மாநில அரசியலில் ஆர்வம் காட்டுவதை விடுத்து மக்கள் நலனில் அக்கறை காட்ட வேண்டும். தமிழ்நாட்டை பொறுத்தவரை திமுக அதிமுக இடையே தான் போட்டி என்பது தமிழக மக்களுக்கு தெரியும். இது எந்த காரணம் கொண்டும் மாற போவதில்லை
சனாதன எதிர்ப்பு ஆதரவு கருத்து எந்த அரசியல் கட்சிக்கு வாக்காக மாறாது.,மேடை பேச்சுக்கு தான் சுவாரஸ்யமாக இருக்கும். 2024ம் ஆண்டு தேர்தலில் சனாதனத்தால் எந்த அரசியல் கட்சியும் லாபம் அடைய போவதில்லை” என கொங்கு ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.







