107 பதக்கங்களுடன் ஆசிய போட்டியை நிறைவு செய்தது இந்தியா!…

சீனாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டியில், 107 பதக்கங்களுடன் இந்தியா போட்டியை நிறைவு செய்தது. 19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா உள்பட…

சீனாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டியில், 107 பதக்கங்களுடன் இந்தியா போட்டியை நிறைவு செய்தது.

19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா உள்பட 45 நாடுகளை சேர்ந்த 12,400 வீரர், வீராங்கனைகள் கலந்துகொண்டுள்ளனர்.

இந்நிலையில், ஆசிய விளையாட்டு போட்டியில், 28 தங்கம் உள்பட 107 பதக்கங்களுடன் இந்திய அணி போட்டியை நிறைவு செய்தது. நேற்று மட்டும் மட்டும் இந்திய அணி 6 தங்கம், 4 வெள்ளி மற்றும் 2 வெண்கலம் என 12 பதக்கங்களை வென்றது. அதிகபட்சமாக தடகள போட்டிகளில் 29 பதக்கம், துப்பாக்கி சுடுதலில் 22 பதக்கங்களை இந்தியா வென்றது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.