போக்குவரத்து தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் – முதலமைச்சர் விரைவில் அறிவிப்பார் என அமைச்சர் சிவசங்கர் தகவல்..!

போக்குவரத்து தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் குறித்து முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் விரைவில் அறிவிப்பார் என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். நாமக்கல் தாலுகா லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் 2023-2026ம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா மற்றும் 50-வது…

போக்குவரத்து தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் குறித்து முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் விரைவில் அறிவிப்பார் என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

நாமக்கல் தாலுகா லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் 2023-2026ம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா மற்றும் 50-வது மகாசபைக் கூட்டம் நாமக்கல்லில் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்ட பின், போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்
செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது..

வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் ஆன்லைன் மூலம் ஓட்டுநர் உரிமம் சான்று,
பதிவுச்சான்று, தகுதிச்சான்று பெறுவது தொடர்பான திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு
சிறப்பாக நடைபெற்று வருகிறது.

தமிழ்நாட்டில் மோட்டார் வாகனங்களுக்கான வரி உயர்வு அண்டை மாநிலங்களை விட குறைவு. 23 ஆண்டுகளுக்குப் பிறகு, தற்போதுதான் வரி உயர்த்தப்பட்டுள்ளது.  இதனால் வாகன உதிரி பாகங்களின் விலை உயர்த்தப்படாது  மேலும், பேட்டரியால் இயங்கும் பேருந்துகளுக்கான டெண்டர் விடப்பட்டுள்ளது.

தீபாவளி போனஸ் கேட்டு போக்குவரத்து தொழிற்ச் சங்கத்தினர் மனு
அளித்துள்ளனர். இதனை கருத்தில் கொண்டு  போக்குவரத்து தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்குவது தொடர்பாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் அறிவிப்பார்  “ என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.