அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக சேர்ப்பதற்கு ஊழியர்கள் பணம் கேட்பதாக ஆட்சியரிடம் நேரடியாகப் புகார் அளித்த நோயாளியால், மருத்துவமனை ஊழியர்கள் பதறியுள்ளார்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம், அரசு மருத்துவமனை சமீபத்தில் மாவட்ட தலைமை மருத்துவமனையாக அறிவிக்கப்பட்டது இந்த மருத்துவமனையில் தினமும் ஆயிரக்கணக்கான புற நோயாளிகளும், நூற்றுக்கணக்கான உள் நோயாளிகளும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனிடையே குடியாத்தம் அரசு மருத்துவமனையில் இன்று வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் திடீர் ஆய்வு மேற்கொண்டுள்ளார். அப்போது உள் நோயாளிகள் மற்றும் புற நோயாளிகளிடம் குறைகளையும் மருத்துவமனை சிகிச்சை குறித்தும் கேட்டறிந்துள்ளார்.
அப்போது, உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டிருந்த ஒருவர், மாவட்ட ஆட்சியரிடம் இங்கு உள்நோயாளியாக அனுமதிப்பதற்கு ஊழியர் ஒருவர் 200 ரூபாய் பணம் கேட்டதாக ஆட்சியரிடம் நேரடியாக மருத்துவர்கள் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் குற்றம் சாட்டு தெரிவித்துள்ளார். அப்போது அருகிலிருந்த மருத்துவமனை ஊழியர் பதறி அடித்து ஐயா நான் சத்தியமாகப் பணம் கேட்கவில்லை எனக் கூறியுள்ளார். உடனடியாக அவரை அங்கேயே எச்சரித்துள்ளார்.
அண்மைச் செய்தி: ‘ஆரம்பக்கட்ட விசாரணை அறிக்கையை வழங்க நீதிமன்றம் உத்தரவு’
அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், மருத்துவமனையில் உள் மற்றும் பிறநோயாளிகளிடம் ஊழியர்கள் யாரும் பணம் பெறக் கூடாது எனவும் அப்படிப் பணம் பெறுவதாகக் குற்றச்சாட்டு வந்தால் ஊழியர்கள் உடனடியாக பணி நீக்கம் செய்யப்படுவார்கள் எனத் தெரிவித்தார். மேலும், தற்போது வேலூர் மாவட்டத்தில் 11 பேருக்கு கொரோன தோற்று உள்ளதாகவும், அவர்கள் தற்போது சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்ட்க்ஹ அவர், போதுமான ஆக்சிஜன் இருப்பு இருப்பதாகவும் கொரோனவை எதிர்கொள்ள அனைத்து விதமான முன் ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக மாவட்ட ஆட்சியர் கூறினார்.








