முக்கியச் செய்திகள் தமிழகம்

சை டிஷ் வாங்குவதில் தகராறு; பழிக்கு பழி கொலை

சை டிஷ் வாங்குவதில் ஏற்பட்ட தகராறில் இளைஞரை கொலை செய்த வழக்கில் 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் சரண்டர் ஆக வந்தவனை கொலை செய்த 4 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் செவ்வாப்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தொட்டிக்கலை, அம்பேத்கர் தெருவைச் சேர்ந்த ஏழுமலை என்பவரது மகன் வேலு (30). வெல்டரான வேலு கடந்த 2 தினங்களுக்கு முன்பு அவனது நண்பர்கள் செல்வா (26), கோகுல், ஸ்டாலின் உள்ளிட்ட 4 பேரும் செவ்வாப்பேட்டை அடுத்த சிறுகடல் டாஸ்மாக் கடையில் மது அருந்துவதற்காக சென்றனர். டாஸ்மாக் கடைக்கு பின்புறம் அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்த போது சைட் டிஷ் வாங்குவதில் நண்பர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அப்போது குடிபோதையில் வேலுவின் நண்பனான செல்வா என்பவன் தன் இடுப்பில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து வேலுவின் கழுத்து, வயிறு, கை, கால் என சரமாரியாக வெட்டியுள்ளான். இதில் சம்பவ இடத்திலேயே வேலு துடிதுடித்து உயிரிழந்துள்ளார். இதையடுத்து கொலை செய்த மர்ம நபர்களை பிடிக்க ஆவடி மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவின் பேரில் துணை ஆணையர் மகேஷ் தலைமையில் 3 தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.

இந்நிலையில் செவ்வாப்பேட்டை அடுத்த வேப்பம்பட்டு பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது, இரு சக்கர வாகனத்தில் வந்த இளைஞர்களை மடக்கி சோதனை செய்ததில் அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளனர். இதில் சந்தேகம் அடைந்த போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதில் சிறு கடல் அருகே டாஸ்மாக் கடை அருகே வேலுவை கத்தியால் வெட்டிக் கொலை செய்த செல்வா மற்றும் ஸ்டாலின் என்பது தெரியவந்தது.

இதையடுத்து செல்வா மற்றும் ஸ்டாலினை கைது செய்த போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது வேலுவை குடிபோதையில் கொலை செய்ததையடுத்து திருநின்றவூர் பகுதியைச் சேர்ந்த பழனி என்பவரது மகன் கோகுல் (21) என்பவன் மட்டும் காவல் நிலையத்தில் சரணடைய வந்துள்ளான்.

அப்போது வேலுவின் நண்பர்கள் சிலர் கோகுலை தாக்கி அழைத்துச் சென்றதாக காவல் நிலையத்தில் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து செவ்வாப்பேட்டை போலீசார் கோகுலை தேடி வந்துள்ளனர். செவ்வாப்பேட்டை அடுத்த தொட்டிகலை பொன்னி அம்மன் கோயில் அருகில் கிருஷ்ணா வாட்டர் கால்வாய் அருகில் உள்ள நிலத்தில் தலையில் பலத்த காயங்களுடன் சடலமாக கோகுல் உடல் கிடப்பது தெரியவந்தது. கோகுலை பெரிய பாறாங்கல்லை கொண்டு தலையில் பலமாக தாக்கி கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் கோகுல் பிரேதத்தைக் கைப்பற்றி திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் வேலுவை கொலை செய்ததை அறிந்த அவனது நண்பர்கள் அயத்தூர் கிராமத்தைச் சேர்ந்த அஜித், வேப்பம்பட்டு பகுதியைச் சேர்ந்த சுனில், சதிஷ் ,வெங்கடேசன் 4 பேரும் செவ்வாப்பேட்டை காவல் நிலையத்தில் சரணடைய வந்த போது தாக்கி கொலை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து காவல் துணை ஆணையர் பெருமாள், பூந்தமல்லி சரக உதவி ஆணையர் முத்துவேல்பாண்டி, இன்ஸ்பெக்டர் டில்லிபாபு ஆகியோர் 4 பேரையும் கைது செய்து வழக்குப் பதிவு செய்து விசராணை நடத்தி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

குன்னூரில் நள்ளிரவில் கதவை உடைத்து வீட்டிற்குள் புகுந்த யானை..

Saravana

“2022 ஜனவரியில் அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி” – முதலமைச்சர்

Halley Karthik

“காங்கிரஸுக்கு இந்த தேர்தல் மிக முக்கியமானது” – பா.சிதம்பரம்

G SaravanaKumar