அடுத்த விக்டிம் யார் ?

பா ரஞ்சித், சிம்புதேவன், வெங்கட் பிரபு, எம் ராஜேஷ் என 4 இயக்குனர்கள் இணைந்து இயக்கியுள்ள விக்டிம் வெப் தொடரின் ட்ரைலர் வெளியானது. கொரோனாவிற்கு பிறகு வெப் தொடர்களின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. ஆங்கில வெப்…

பா ரஞ்சித், சிம்புதேவன், வெங்கட் பிரபு, எம் ராஜேஷ் என 4 இயக்குனர்கள் இணைந்து இயக்கியுள்ள விக்டிம் வெப் தொடரின் ட்ரைலர் வெளியானது.

கொரோனாவிற்கு பிறகு வெப் தொடர்களின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. ஆங்கில வெப் தொடர்களுக்கு இணையாக தமிழில் தற்போது பல வெப் தொடர்கள் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்த நிலையில் சோனி லைவ் ஓடிடி தளத்தின் புதிய வெப் தொடர் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பா ரஞ்சித், சிம்புதேவன், வெங்கட் பிரபு, எம் ராஜேஷ் என 4 இயக்குனர்கள் இணைந்து இயக்கியுள்ள விக்டிம் வெப் தொடரின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. இந்த வெப் தொடரில் நாசர், தம்பி ராமைய்யா, நட்டி நடராஜ், பிரியா பவானிசங்கர், அமலா பால், உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சாம் சி எஸ், பிரேம்ஜி, கணேஷ் சேகர், தென்மா என 4 இசையமைப்பாளர்கள் இந்த வெப் தொடருக்கு இசையமைத்துள்ளார்கள்.

கிரைம் த்ரில்லரை மையமாக கொண்டு உருவாகியுள்ள இந்த வெப் தொடர் 4 இயக்குனர்கள், 4 கதைகள், 4 வாழ்க்கை, 4 பாதிக்கப்பட்டவர்கள் அடுத்தது யார் என்ற கேள்வியுடன் விக்டின் வெப் தொடரின் ட்ரைலர் வெளியாகி உள்ளது. சோனி லைவ் ஓடிடி தளத்தில் ஆகஸ்ட் 5 ஆம் தேதி விக்டிம் வெப் தொடர் வெளியாக உள்ளது என்ற அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

– தினேஷ் உதய் 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.