நீட் தேர்வு ஆடை சர்ச்சை விவகாரம்: தேசிய தேர்வுகள் முகமை விளக்கம்!

கொல்லத்தில் நடைபெற்ற நீட் தேர்வு ஆடை சர்ச்சை விவகாரம் தொடர்பாக  தேசிய தேர்வுகள் முகமை விளக்கம் அளித்துள்ளது. நாடு முழுவதும் மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான நீட் தேர்வு கடந்த 17ஆம் தேதி நடைபெற்றது. இந்தத்…

கொல்லத்தில் நடைபெற்ற நீட் தேர்வு ஆடை சர்ச்சை விவகாரம் தொடர்பாக  தேசிய தேர்வுகள் முகமை விளக்கம் அளித்துள்ளது.

நாடு முழுவதும் மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான நீட் தேர்வு கடந்த 17ஆம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்வை 10 லட்சத்து 64 மாணவ, மாணவிகள் எழுதினர். இந்தத் தேர்வில் மாணவிகளுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதில், கேரள மாநிலம், கொல்லத்தில் தேர்வு எழுதச் சென்ற  மாணவிகளிடம் தேர்வுக்கூட ஊழியர்கள் அத்துமீறி நடந்து கொண்டதாக புகார்கள் எழுந்துள்ளன.

கொல்லம் தேர்வு மையத்திற்குச் சென்ற மாணவர்களிடம் ஊளியர்கள் மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை செய்துள்ளனர். மேலும், மாணவிகளின் உள்ளாடைகளைக் களைந்தும் சோதனை நடத்தியுள்ளனர். இதனால், மாணவிகள் பலரும் மனதளவில் பாதிக்கப்பட்டதாக புகார் கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவி ஒருவர் கொல்லம் போலீஸில் புகார் அளித்துள்ளனர். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில், இதற்கு விளக்கம் அளித்துள்ள தேசிய தேர்வுகள் முகமை, அது போன்ற ஒரு சம்பவம் அந்த குறிப்பிட்ட மையத்தில் நடைபெறவில்லை என்றும், மேலும் அந்த மாணவி நீட் தேர்வு எழுதியுள்ளார் என்றும் உறுதிப்படுத்தியுள்ளது. ஆடை சர்ச்சை விவகாரம் தொடர்பாக உடனடியாகவோ, தேர்வு நடந்து முடிந்த பின்னோரோ எந்தவொரு புகாரும் அளிக்கவில்லை. மேலும், தேசிய தேர்வுகள் முகமையின் ஆடை கட்டுப்பாடு வழிமுறையில் இதுபோன்று நடைமுறைகளை அனுமதிக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.