முதல்வர் ஸ்டாலினை அருவருக்கத்தக்க வார்த்தைகளால் சமூக வலைதளங்களில் விமர்சித்த நபரின் முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த வேலப்பாடியைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவர் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்து முகநூலில் அவதூறு கருத்துகளைப் பதிவு செய்து பரப்பியதாக ஆரணி தாலுலா காவல் நிலையத்தில் ரவி என்பவர் புகார் அளித்திருந்தார். அந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து, முன் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் செந்தில்குமார் மனு தாக்கல் செய்திருந்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த மனு நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. காவல் துறை தரப்பில்
கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் தாமோதரன் ஆஜராகி முன் ஜாமீன் வழங்கக் கூடாது என எதிர்ப்புத் தெரிவித்து வாதிட்டார். இந்நிலையில், செந்தில்குமார் தரப்பில் மன்னிப்பு கோரி பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டதை ஏற்க மறுத்த நீதிபதி, முன்ஜாமீன் மனுவையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
-ம.பவித்ரா