சமூக நல்லிணக்க மனித சங்கிலிக்கு தடை விதித்திருப்பது ஏமாற்றம் அளிக்கிறது. காவல் துறையிடம் அனுமதி பெற்று மனித சங்கிலி நடத்தப்படும் விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
நாமக்கல்லில் விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், அக்டோபர் 2 ம் தேதி காந்தி பிறந்தநாளில் ஆர்.எஸ்.எஸ் தமிழகத்தில் 50 இடங்களில் அணி வகுப்பு நடத்தப் போவதாக அறிவித்தது. நீதிமன்றம் காவல்துறைக்கு வழிக்காட்டுதல் தந்துள்ளது. நேற்று 28ம் தேதி அனுமதி வழங்க வேண்டும் என உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. ஆனால் இன்று தமிழக அரசு ஆர்.எஸ்.எஸ். அணி வகுப்புக்கு, விசிக, இடதுசாரிகள் முன்மொழிந்த சமூக நல்லிணக்க மனித சங்கிலிக்கு தடை விதித்திருப்பதாக தகவல் கூறுகின்றன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
சமூக நல்லிணக்க மனித சங்கிலிக்கு ஏராளமான அரசியல் இயக்கங்கள், மனித உரிமை இயக்கங்கள், சமூக நீதி இயக்கங்கள் ஆதரவு தெரிவித்த நிலையில் இந்தத் தடை எமக்கு ஏமாற்றம் அளிக்கிறது. சட்டப்படி அனுகி அனுமதி பெற்று சமூக நல்லிணக்க மனித சங்கிலி பேரணியை நடத்துவோம். தமிழ்நாடு தழுவிய போராட்டத்தை ஒட்டு மொத்தமாக தடை விதித்திருப்பது சற்று ஏமாற்றத்தை தருகிறது. சமூக நல்லிணக்க மனித சங்கிலி போராட்டம் என்பது சமூக அமைதியை நிலைநாட்டக் கூடிய அடையாள போராட்டம்.
ஆர்எஸ்எஸ் நடத்த கூடிய 50 இடங்களை தவிர்த்து மற்ற இடங்களில் மனித சங்கிலி நடத்த அனுமதிக்க வேண்டும். 500 இடங்களில் மனித சங்கிலி நடத்த அனுமதி கூறியிருந்தோம். தமிழகத்தில் உள்ள அனைத்து மையங்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது அதிர்ச்சி அளித்துள்ளது.
மக்களின் அடிப்படை பிரச்சனைகளுக்காக பாஜக பேரணி நடத்தினால் நாம் தலையிட போவதில்லை. பாஜக, ஆர்.எஸ்.எஸ். ஒன்று தான் என்றாலும் கூட பாஜக அரசியல் இயக்கம். ஆர்.எஸ்.எஸ் என்பது ஒரு வகுப்புவாத இயக்கம், முஸ்லிம், கிறிஸ்துவ வெறுப்பு இயக்கம். அந்த இயக்கம் கிராமங்கள் தோறும் ஜெய் ஸ்ரீ ராம் என கிராமங்கள் தோறும் சொல்ல போவது என்றால் தமிழ்நாடு நாசமாக விடும் என்ற கவலை இருக்கிறது. அதற்கு அனுமதி தரக்கூடாது என்பது என்னுடைய வேண்டுகோள் என்று கூறினார்.