ஆயுத பூஜை விடுமுறை: சென்னையில் சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

செப்டம்பர் 30 மற்றும் அக்டோபர் 1 ஆம் தேதி இயக்கப்படும் மூன்று பேருந்து நிறுத்தத்திலிருந்து பயணம் மேற்கொள்ளப்படும் எனப் போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது. ஆயுத பூஜை மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு தமிழ்நாடு அரசு…

செப்டம்பர் 30 மற்றும் அக்டோபர் 1 ஆம் தேதி இயக்கப்படும் மூன்று பேருந்து நிறுத்தத்திலிருந்து பயணம் மேற்கொள்ளப்படும் எனப் போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.

ஆயுத பூஜை மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு தமிழ்நாடு அரசு சார்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் எனப் போக்குவரத்துத் துறை ஏற்கனவே தெரிவித்திருந்தது. வழக்கமாக இயக்கக்கூடிய 2100 பேருந்துகளுடன் கூடுதலாக 2050 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் எனப் போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது. இந்நிலையில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் பேருந்து நிலையம் மற்றும் இயக்கப்படும் பேருந்துகளின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.


தாம்பரம் மெப்ஸ் பேருந்து நிறுத்தத்தில் இயக்கப்படும் பேருந்துகள் விவரம்: திண்டிவனம் வழியாகத் திருவண்ணாமலை செல்லும் பேருந்துகள் போரூர்,சேத்துப்பட்டு, வந்தவாசி, செஞ்சு ,மற்றும் திண்டிவனம் வழியாக பண்ருட்டி, நெய்வேலி, வடலூர்,சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் ,மேலும் புதுச்சேரி சிதம்பரம் செல்லும் பேருந்துகள் தாம்பரம் மேப்ஸ் பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும்

பூந்தமல்லி பைபாஸ் மாநகர போக்குவரத்துக் கழகம் பூந்தமல்லி பணிமனை அருகிலிருந்து இயக்கப்படும் பேருந்துகள் விவரம்; வேலூர்,ஆரணி ,ஆற்காடு ,திருப்பத்தூர், காஞ்சிபுரம், செய்யாறு, ஓசூர்,திருத்தணி மற்றும் திருப்பதி செல்லும் பேருந்துகள் இங்கிருந்து இயக்கப்படும். கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும் பேருந்துகள் விவரம்: ஈ.சி.ஆர் வழியாகப் புதுச்சேரி, கடலூர் மற்றும் சிதம்பரம் செல்லும் பேருந்துகள் இங்கிருந்து இயக்கப்படும்.


மேலும் மயிலாடுதுறை தஞ்சாவூர் ,கும்பகோணம், திருவாரூர், திருத்துறைப்பூண்டி ,நாகப்பட்டினம், வேளாங்கண்ணி ,அரியலூர் ,ஜெயங்கொண்டம், திருச்சி, மதுரை,திருநெல்வேலி, செங்கோட்டை, தூத்துக்குடி ,திருச்செந்தூர் ,நாகர்கோவில், கன்னியாகுமரி, விழுப்புரம் ,கள்ளக்குறிச்சி, காரைக்குடி, புதுக்கோட்டை ,திண்டுக்கல், விருதுநகர், திருப்பூர், ஈரோடு, ஊட்டி ,ராமநாதபுரம், சேலம்,கோயம்புத்தூர் ,பெங்களூர், திருவனந்தபுரம் மற்றும் குருவாயூர் ஆகிய ஊருக்குச் செல்லும் பேருந்து கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும் எனப் போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.