மாற்றுத்திறனாளிகள் வேலை வாய்ப்பு முகாம்

சென்னையில் மாற்றுத்திறனாளிகளுக்கான வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது. சென்னை கிண்டியிலுள்ள தேசிய மாற்றுத் திறனாளிகளுக்கான மறுவாழ்வு மையத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்று வருகிறது. இதில் 17க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்றுள்ளனர். இதன்…

சென்னையில் மாற்றுத்திறனாளிகளுக்கான வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது.

சென்னை கிண்டியிலுள்ள தேசிய மாற்றுத் திறனாளிகளுக்கான மறுவாழ்வு மையத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்று வருகிறது. இதில் 17க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்றுள்ளனர். இதன் மூலம் 300க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை வாய்ப்பு கிடைக்க அதிகளவு வாய்ப்புகள் உள்ளது. தற்போது வரை 300 க்கும் மேற்பட்டோர் வேலை வாய்ப்பு முகாமை பயன்படுத்த வருகை புரிந்துள்ள நிலையில் 600 பேர் வரை வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முகாம் இன்று மாலை 4 மணி வரை நடைபெறுகிறது.

மாற்றுத்திறனாளிகள் வேலை வாய்ப்பு முகாம்முகாமுக்கு வரும் செவித்திறன் குறைபாடு உள்ளவர்களுக்கு இங்கிருக்கும் இளைஞர்கள் செய்கை மொழி மூலம் மொழிபெயர்த்து உதவுகின்றனர். மேலும் இதுபோன்ற வேலைவாய்ப்பு முகாம்கள் அடுத்தடுத்து நடத்தப்படும் என இந்நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர் சங்கீதா தெரிவித்துள்ளார். இதனையடுத்து இந்த முகாம் மூலம் வேலைவாய்ப்பு பெற்ற வரலட்சுமி அளித்த பேட்டியில், “என் தோற்றத்தினால் பல்வேறு முறை வேலை கிடைக்காமல் நிராகரிக்கப்பட்டுள்ளேன். இன்று கிடைத்தது மகிழ்ச்சி ஆனாலும் ஒரு நிரந்தர வேலை எங்களைப் போன்றவர்களுக்கு வேண்டும்” எனத் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.