முக்கியச் செய்திகள் தமிழகம்

“ஐஐடி-யில் தொடர் சாதி வன்முறை வருத்தமளிக்கிறது”- திருமாவளவன் எம்.பி

சென்னை ஐஐடியில் நடைபெற்றுவரும் சாதி வன்முறைகள் வருத்தமளிப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

தியாகி இரட்டைமலை சீனிவாசனின் 161 வது பிறந்தநாளை முன்னிட்டு கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் உள்ள அவரின் திருவுருவ சிலைக்கு மரியாதை செலுத்திய பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த திருமாவளவன், “தமிழ்த்தேசிய சிந்தனைகளை விதைத்தவர், சாதி அடையாளத்தை முற்றிலும் துறத்தவர்.” என இரட்டைமலை சீனிவாசன் குறித்து கூறியுள்ளார்.

மேலும், “மோடி அரசின் வறட்டு பிடிவாதத்தால் ஸ்டேன் சுவாமி உயிரிழந்துள்ளார். இதை விசிக கண்டிக்கிறது. இது இடதுசாரிகள் மீது தொடுக்கப்பட்ட வன்முறை.” என்றும் கூறியுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், “சென்னை ஐஐடியில் தொடர் சாதி வன்முறை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவங்கள் வருத்தத்தை அளிக்கிறது.” என்று திரமா தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement:
SHARE

Related posts

சீனாவின் ஆக்கிரமிப்பு குறித்து மத்திய அரசு தைரியமாக பேச வேண்டும் – ராகுல் காந்தி

Jeba Arul Robinson

டாஸ்மாக் பார், திரையரங்குகளை மூட வேண்டும்: வழக்கு!

Ezhilarasan

இன்று மாலை மதுசூதனன் உடல் நல்லடக்கம்

Saravana Kumar