கொல்கத்தாவில் தோல் பதனிடும் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட 2 தீயணைப்பு வீரர்கள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் டாங்க்ரா பகுதியில் அமைந்துள்ள தோல் பதனிடும் ஆலைக்கு சொந்தமான குடோனில் நேற்று இரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ தொழிற்சாலை முழுவதும் மலமலவென பரவியது. இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த 10க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் தீ அணைக்கும் பணியில் ஈடுபட்டன.
https://twitter.com/ANI/status/1502650097532047365
தீ அதிவேகமாக எரிந்ததால் தீயை கட்டுப்படுத்த முடியாமல் வீரர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். அப்போது 2 வீரர்களுக்கு காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த தகவல் அறிந்த அம்மாநில முதலமைச்சர் மமதா நிலமை குறித்து கேட்டறிந்தார். 10 மணி நேர போராட்டத்துக்கு பின்னர் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இதையடுத்து இதுகுறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்தினால் ஏற்பட்ட சேத மதிப்பு குறித்து இதுவரை தகவல் ஏதும் வெளியாகவில்லை.







