செய்திகள்

இலவச சினிமா பயிற்சி அளிக்கும் வெற்றிமாறன்!

முதல் தலைமுறை பட்டதாரி மாணவர்களுக்கு உணவு, இருப்பிடத்துடன் ஓராண்டு இலவச சினிமா பயிற்சி அளிக்கவுள்ளார் இயக்குனர் வெற்றிமாறன். 

திரைப் பண்பாட்டு ஆய்வகம் என்ற நிறுவனத்துடன் இணைந்து ஓராண்டு முதுநிலை சினிமா பயிற்சி வகுப்பினை திரைப்பட இயக்குனர் வெற்றிமாறன் தொடங்கியுள்ளார். இதற்கான நிகழ்ச்சி சென்னை சாலிகிராமத்தில் இன்று நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட வெற்றிமாறன், தற்போது  சினிமா பயிற்சி வகுப்புகளுக்கு அதிக கட்டணம் வசூல் செய்கின்றனர்,  இதனால் நலிந்த மாணவர்கள் புறக்கணிக்கப்படுகின்றனர் என்று குறிப்பிட்டார். 

நலிந்த முதல் தலைமுறை பட்டதாரிகளை கண்டறிந்து அவர்களுக்கு உணவு இருப்பிடத்துடன் ஓராண்டு இலவச சினிமா பயிற்சி அளிக்க முடிவு செய்துள்ளதாகவும் வெற்றிமாறன் கூறினார்.

தொடங்கப்படவுள்ள சினிமா பயிற்சி வகுப்பிற்கு பேராசிரியர் ராஜநாயகம் தலைமை ஏற்பதாகவும், சினிமாவுடன் சமூக அறிவியல், ஆங்கிலம், தமிழ், கலாச்சாரம், இலக்கியம் ஆகியவை பயிற்சி வகுப்புகளில் பயிற்றுவிக்கப்படும் எனவும் வெற்றிமாறன் தெரிவித்தார். 

அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “அனைவருக்கும் அனைத்து வகையான கதைகளையும் சொல்ல உரிமை உண்டு. ஆனால், இயக்குநர்கள் சமூக பொறுப்போடு செயல்பட வேண்டும்” என்று வலியுறுத்தினார். 

Advertisement:

Related posts

மக்கள் சார்ந்த வளர்ச்சியே மாநில வளர்ச்சியின் கொள்கையாக இருக்க வேண்டும்: பேராசிரியர் ஜெயரஞ்சன்

Karthick

கொரோனாவை எதிர்த்து போராடுவதில் கவனம் செலுத்துவோம்: பிரதமர் மோடி

Karthick

ஒரே நாளில் 46,951 பேருக்கு கொரோனா தொற்று!

Ezhilarasan