இயக்குநர் பாக்யராஜ் காலமானார்

இயக்குநர் பாக்யராஜ் இன்று காலமானார்.

இயக்குநர் மற்றும் நடிகரான பாக்யராஜிற்கு இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அவர் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவரின் உயிர் பிரிந்துள்ளது. அவருக்கு வயது 73.

தமிழ்த் திரையுலகில் இயக்குநர், திரைக்கதை அமைப்பாளர், நடிகர், வசனகர்த்தா எனப் பன்முகம் கொண்டவர் பாக்யராஜ் . மேலும் இவர் அண்மையில் மறைந்த இயக்குநர் பாரதிராஜாவிடம் உதவிய இயக்குநராக பணியாற்றியவர் என்பது குறிப்படத்தக்கது.

தமிழ் சினிமாவின் மூத்த இயக்குநர்கள் இருவர் அடுத்தடுத்து காலமாகி இருப்பது திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.