வத்தலகுண்டு அருகே சோதனை சாவடியில் இளைஞர்கள் காவல்துறையினரை தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகேயுள்ள விருவீடு காவல் நிலைய சோதனைச்சாவடியில் வைக்கப்பட்டுள்ள தடுப்புகளில் மோதி, இருசக்கர வாகனத்தில் இருந்த இளைஞர்கள் கீழே விழுந்துள்ளனர்.
அந்த இளைஞர்களிடம் காவலர்கள் விசாரணை நடத்திய போது, வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால், காவல்துறையினர் மீது இளைஞர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
இதையடுத்து, காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்திய இளைஞர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் தொடர்புடைய, முத்துமாணிக்கம், ரஞ்சித், காளிதாஸ் உட்பட ஆறு இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.







