தமிழகம் முழுவதும் மாற்றுத்திறனாளிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுவதை கண்காணிப்பு குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகளிக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதை கண்காணிப்பது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு அறிவுறுத்தல்களை வழங்கியிருந்த நிலையில், கண்காணிப்பு அதிகாரிகளை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி கண்காணிப்பு அதிகாரியாக செயல்படுவார் என அரசு உத்தரவில் கூறப்பட்டுள்ளது. மாநில அளவில் மாற்றுத்திறனாளிகள் நல வாரியத்தின் ஆணையரும், மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியரும் கண்காணிப்பு அதிகாரிகளாக செயல்படுவர்கள்.
தகுதிவாய்ந்த அல்லது விருப்பம் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு முகாம்கள் அமைத்து தடுப்பூசி செலுத்தவேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்ட விவரங்கள் அடங்கிய அறிக்கையை வாரம்தோறும் மாற்றுத்திறனாளிகள் நலவாரிய ஆணையத்தில் சமர்பிக்கவும் உத்தரவிட்டுள்ளது.







