ஐபிஎல் தொடரின் இன்று நடைபெறும் இரண்டாவது போட்டியில் சென்னை மற்றும் டெல்லி அணிகள் மோதுகின்றன. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டி இன்று இரவு 7 ; 30 மணிக்கு தொடங்குகிறது.
இந்த நிலையில் தற்போது இப்போட்டிக்கான டாஸ் போடப்பட்டுள்ளது. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி கேப்டன் அக்சார் பட்டேல் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார். இதனையடுத்து சென்னை அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.
அணி விவரம்
சென்னை : சஞ்சு சாம்சன்(வி.கீ), ருதுராஜ் கெய்க்வாட்(கே), ஆயுஷ் மத்ரே, சர்பராஸ் கான், ஷிவம் துபே, டெவால்ட் ப்ரீவிஸ், ஜேமி ஓவர்டன், நூர் அகமது, அன்ஷுல் கம்போஜ், குர்ஜப்னீத் சிங், கலீல் அகமது
டெல்லி : பாத்தும் நிசாங்கா, கே.எல். ராகுல்(வி.கீ), சமீர் ரிஸ்வி, அக்சர் படேல்(கே), டேவிட் மில்லர், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், ஆக்கிப் நபி தார், லுங்கி என்கிடி, குல்தீப் யாதவ், டி நடராஜன், முகேஷ் குமார்.







