தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கண்டித்து மாணவர்கள் போராட்டம் நடத்தினார்களா? – வைரலாகும் படம் உண்மையா?

தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் நடத்துவதைக் காட்டும் படம் ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது

This News Fact Checked by ‘The Quint’ 

‘அனைத்து இந்தியர்களும் சகோதர சகோதரிகள். வடக்கு மற்றும் தெற்கு என்கிற பேதத்தை நிறுத்துங்கள், #GetOutStalin’ – என்கிற பதாகையை ஏந்தி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினைக் குறிக்கும்  வாசகம் கொண்ட பலகையை பள்ளி குழந்தைகள் ஏந்தி நிற்பதாகக் கூறப்படும் ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

  இது உண்மையா?:

இல்லை, இந்தப் படம் செயற்கை நுண்ணறிவு (AI) கருவிகளைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது. இது Xதளத்தின் சொந்தமான Grok AI ஐ பயன்படுத்தி உருவாக்கப்பட்டிருக்கலாம்.

உண்மையை எப்படிக் கண்டுபிடித்தோம்?: முதலில், வைரலான புகைப்படத்தைப் பற்றிய சில விவரங்களைக் கவனித்தோம்.

  • ஒரு பெண்ணின் கை அந்த அடையாளத்தின் வழியாகச் செல்வது போல் தெரிகிறது, மற்றொரு பெண்ணின் கையில் ஆறு விரல்கள் உள்ளன.
  • இந்த விவரங்கள், X இன் AI கருவியான ‘Grok’ என்ற வாட்டர்மார்க்குடன் இடம்பெற்றிருந்ததால் படம் AI-உருவாக்கிய ஒன்று என்பதைக் காட்டியது.

  • இதை உறுதிப்படுத்த, படத்தை SightEngine மற்றும் Hive Moderation கருவிகளின் வழியே ஆய்வு செய்தோம்
  • சைட்எங்கினின் பகுப்பாய்வு, அந்தப் படம் உண்மையானது அல்ல, மாறாக AI-உருவாக்கிய ஒன்று என்பதை 99 சதவீத உறுதியைக் காட்டியது.
  • இதேபோல், ஹைவ் மாடரேஷனின் கருவி, AI கருவிகளைப் பயன்படுத்தி படம் உருவாக்கப்பட்டது என்பதை 96.9 சதவீத உறுதியைக் காட்டியது.

    முடிவு:

    தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் நடத்துவதைக் காட்டுவதாகக் கூறும் வகையில், செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட படம் பகிரப்படுகிறது என்பது இதன் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

Note : This story was originally published by ‘The Quint’ and Translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.