மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிப்பில், உருவாகும் திரைப்படத்தின் அப்டேட் மே 6-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
உதயநிதி நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கடைசியாக மாமன்னன் திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் வடிவேலு, ஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தனர். ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்த இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.
அனைத்து எதிர்ப்புகளையும் மீறி மாமன்னன் திரைப்படம் தமிழ்நாடு முழுவதும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தைப் பார்த்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திருமாவளவன் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும், நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், தனுஷ், பா.ரஞ்சித் உள்ளிட்ட பல திரை பிரபலங்களும் பாராட்டினர்.
அதேபோல இந்திய அளவில் மட்டுமல்லாது, நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் உலகளவிலான டாப் 10 படங்களில் ஒன்பதாவது இடத்தைப் பிடித்தது. அதில் மூன்று நாடுகளில் முதலாவது இடத்தையும், அதனுடன் சேர்ந்து ஆறு நாடுகளில் முதல் பத்து இடங்களிலும் இப்படம் இடம் பெற்றது.
https://twitter.com/NeelamStudios_/status/1786752008059605132?t=qLtLtFFvizPRZQ87RFy2oA&s=08
இந்நிலையில், மாரிசெல்வராஜ் தனது அடுத்த படத்திற்கு தயாராகியுள்ளார். இந்த படத்தில் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நடிக்கவுள்ளார். இப்படத்தை பா.ரஞ்சித் தயாரிக்கவுள்ளார். இப்படம் குறித்த அப்டேட் நாளை மறுநாள் (மே 6) அன்று வெளியாகும் என படக்குழு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த பதிவில், “உற்சாகமான செய்தி, விரைவில்..” என பதிவிடப்பட்டுள்ளது.







