மலையாள முன்னணி நடிகர் மோகன்லால் நடிப்பில் அண்மையில் திரையரங்குகளில் வெளியான படம் திரிஷ்யம் 3. ஜீத்து ஜோசப் இயக்கியுள்ள இப்படம் திரிஷ்யம் 1 மற்றும் 2 ஆகிய பாகங்களின் தொடர்ச்சியாக வெளியாகியுள்ளது.
முதல் 2 பாகங்களை போலவே இந்த பாகத்திலும் ஜார்ஜ் குட்டியாக வரும் மோகன்லாலின் நடிப்பு அனைவரையும் கவர்ந்துள்ளது. மேலும் மீனா, அன்சிபா ஹசன், எஸ்தர் அனில், ஆஷா சரத் உள்ளிட்டோரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். ஆசிர்வாத் சினிமாஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனில் ஜான்சன் இசையமைத்துள்ளார்.
மேலும் இப்படம் ஜூன் 18 ஆம் தேதி பிரைம் வீடியோ ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
இந்த நிலையில் மே 21 ஆம் தேதி வெளியான திரிஷ்யம் 3 திரையரங்கு வசூல், ஓடிடி மற்றும் சாட்டிலைட் விற்பனை உள்ளிட்டவை மூலம் ரூ. 330 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.




