’தோனிதான் எப்போதும் எங்கள் தல… ’ – கே.எல்.ராகுல்..!

 ’தோனிதான் எப்போதும் எங்களுக்கு தலைவன்’ என கே.எல்.ராகுல் புகழாரம் சூட்டியுள்ளார். ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் ஐபிஎல் தொடர்கள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் தற்போது 17வது சீசன் நடைபெற உள்ளது.  ஐபிஎல் 2024ம் ஆண்டிற்கான…

 ’தோனிதான் எப்போதும் எங்களுக்கு தலைவன்’ என கே.எல்.ராகுல் புகழாரம் சூட்டியுள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் ஐபிஎல் தொடர்கள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் தற்போது 17வது சீசன் நடைபெற உள்ளது.  ஐபிஎல் 2024ம் ஆண்டிற்கான ஏலம் டிசம்பர் 19 ஆம் தேதி துபாயில் உள்ள கோகோ கோலா அரங்கில் நடைபெற உள்ளது. இந்நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ஹார்திக் பாண்டியா நியமிக்கப்பட்டதில் இருந்து சமூக வலைதளங்களில்  ரோஹித் சர்மா ரசிகர்கள் தங்கள் ஆதங்கத்தினை பதிவு செய்து வருகின்றனர்.

இந்நிலையில், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்தியா கிரிக்கெட் அணியின்  கேப்டனாக கே.எல்.ராகுல் நியமிக்கப்பட்டுள்ளார். சமீபத்தில் முன்னாள் கேப்டன் தோனி குறித்து கே.எல்.ராகுல் கூறியதாவது:

https://twitter.com/CricCrazyJohns/status/1735916841070145562

 

”எங்களில் யாரையும் தோனியுடன் ஒப்பிட முடியாது. யாரும் அந்த உயர்ந்த மனிதனுடன் எங்களை ஒப்பிடுவதை விரும்பமாட்டோம். அவர்தான் எப்போதும் எங்களுக்கு தலைவன். அவரிடமிருந்து நாங்கள் நிறைய கற்றுக் கொண்டிருக்கிறோம். டிஆர்எஸ், ஸ்டம்பிங்கில் அவர் செய்ததை பார்த்து நான் தனிப்பட்ட முறையில் நிறைய கற்றுக் கொண்டிருக்கிறேன்” எனக் கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.