சந்தேகம் காரணமாக மனைவியை அடித்து துன்புறுத்தி வந்த கணவர், அதனை வீடியோவாகவும் எடுத்து நண்பர்களுக்கு அனுப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தருபுமரி மாவட்டம், ஏலகிரி கிராமத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் சக்திவேல் – சத்யா தம்பதிக்கு திருமணமாகி 18 ஆண்டுகள் ஆகின்றன. இவர்களுக்கு 12ம் வகுப்பு படிக்கும் மகள் இருக்கிறார். இந்நிலையில், சக்திவேல் வீட்டிற்கு, உறவுக்காரரான வெற்றிவேல் அடிக்கடி வந்து சென்றதுடன், சத்யாவுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து, தமது கணவரிடம் சத்யா தெரிவித்துள்ளார். ஆனால், மனைவி மீது சந்தேகம் கொண்ட சக்திவேல், மனைவியை அடித்து துன்புறுத்தியுள்ளார். மேலும், தமது மனைவிக்கு பாலியல் தொந்தரவு கொடுக்கும் வெற்றிவேல் மீது தொப்பூர் காவல்நிலையத்தில் சக்திவேல் புகார் அளித்துள்ளார். போலீசார் நடவடிக்கை எடுக்காத காரணத்தனால், வெற்றிவேலின் அத்துமீறல்கள் தொடர்ந்துள்ளன.
இதனால் விரத்தியடைந்த சக்திவேல், 2 முறை உயிரிழப்புக்கு முயன்று உறவினர்களால் காப்பாற்றப்பட்டுள்ளார். இந்நிலையில், மனைவி சத்யாவை தினமும் அடித்து துன்புறுத்தும் சக்திவேல், அதனை வீடியோவாக பதிவு செய்து நண்பர்களுக்கு அனுப்பியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவிய நிலையில், போலீசார் சத்யாவின் வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தினர்.








