தாராபுரம் இடைத்தேர்தல்: இரண்டாம் சுற்று முடிவில் அதிமுக முன்னிலை!

தாராபுரம் இடைத்தேர்தல் இரண்டாம் சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் அதிமுக 600 வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளது.

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய தொகுதிகளில் கடந்த அக்.6-ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்பட்டு இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்கு எண்ணிக்கையில் முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டது. இதனைத்தொடர்ந்து இவிஎம் வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது.

முதல் செற்று முடிவில் இரண்டு தொகுதிகளிலும் தவெக முன்னிலையில் இருந்த நிலையில், தாராபுரத்தில் இரண்டாம் சுற்று எண்ணிக்கையில் பின்னடைவை சந்தித்துள்ளது.

இரண்டாம் சுற்று

தாராபுரம்

  1. அதிமுக (பானுமதி) – 8212
  2. தவெக (சத்தியபாமா) – 7612
  3. திமுக (சுகன்யா) – 6032
  4. நாதக (கார்த்திகா) – 720
  5. சிபிஐ ( லட்சுமணன்) – 177

தாராபுரம் தொகுதியில் இரண்டாம் சுற்று முடிவில் அதிமுக 600 வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.