முக்கியச் செய்திகள் தமிழகம் சினிமா

வெளியானது தனுஷின் ’வாத்தி’ பட ட்ரெய்லர்!

தனுஷ் நடித்துள்ள வாத்தி திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

திருச்சிற்றம்பலம், நானே வருவேன் படங்களுக்குப் பிறகு தனுஷ் தற்போது வெங்கி அட்லுரி இயக்கத்தில் வாத்தி திரைப்படத்தில் நடித்துள்ளார். தெலுங்கில் சார் என்ற பெயரில் இந்தப் படம் உருவாகியுள்ளது. சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சம்யுக்தா மேனன் நடித்துள்ளார். முக்கிய கதாப்பாத்திரங்களில் சமுத்திரகனி நடித்துள்ளார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்நிலையில் இப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. அதிரடி ஆக்‌ஷன், நகைச்சுவை, காதல் என கலவையான காட்சிகளுடன் வெளியாகியுள்ள வாத்தி திரைப்படத்தின் ட்ரெய்லர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படம் வரும் பிப்ரவரி 17 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

ஏற்கனவே வெளியான வாத்தி படத்தின், ’நாடோடி மன்னன்’, ’வா வாத்தி’ ஆகிய பாடல்கள் ரசிகர்களின் ப்ளேலிஸ்ட்டில் தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கிறது. படத்தின் ட்ரெய்லரும் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளதால், ’வாத்தி’ மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

குடியரசுத் தலைவர் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுகிறார்?

EZHILARASAN D

கார்பரேட் நிறுவனத்திற்கு எதிராக போராடும் கலகத் தலைவன்- விமர்சனம்

G SaravanaKumar

இயக்குனர் மணிரத்னம், நடிகர் விக்ரம் உள்ளிட்டவர்களுக்கு வக்கீல் நோட்டீஸ்.

G SaravanaKumar