தனுஷ் இயக்கும் மூன்றாவது படம் – தலைப்பு வெளியீடு!

நடிகர் தனுஷ் இயக்கும் மூன்றாவது படத்தின் பெயர் “நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்” என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2017-ம் ஆண்டு வெளியான ‘ப.பாண்டி’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனர் அவதாரம் எடுத்தார் நடிகர்…

நடிகர் தனுஷ் இயக்கும் மூன்றாவது படத்தின் பெயர் “நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்” என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2017-ம் ஆண்டு வெளியான ‘ப.பாண்டி’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனர் அவதாரம் எடுத்தார் நடிகர் தனுஷ். தொடர்ந்து தான் நடிக்கும் 50-வது படத்தையும் அவரே இயக்கி வருகிறார். இந்த நிலையில், தனுஷ் இயக்கும் மூன்றாவது படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது.

இது தொடர்பாக நடிகர் தனுஷ் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘டிடி3’ மற்றும் 24.12.23 என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அந்த புகைப்படத்தில் கடற்கரையில் காலியாக இருக்கும் பென்ச் ஒன்றும் இடம்பெற்றுள்ளது. படம் தொடர்பான வேறு எந்த தகவலும் இடம்பெறவில்லை.

https://twitter.com/dhanushkraja/status/1738900459526779086

அதன்படி, ஒரு வீடியோவை வெளியிட்டு படத்தின் தலைப்பை அறிவித்துள்ளார் நடிகர் தனுஷ். அந்த படத்தின் பெயர் “நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்” என வைக்கப்பட்டுள்ளது. இதனை நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது. தனுஷ் ரசிகர்கள் இதனை கொண்டாடி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.