முக்கியச் செய்திகள் சினிமா

தனுசுக்கு கதை சொல்லும் அளவுக்கு சிந்திக்க தெரியவில்லை – இயக்குநர் கஸ்தூரிராஜா

நானே வருவேன் திரைப்படத்திற்காகக் காத்துக்கொண்டிருப்பதாகவும், தனது 2 மகன்களின் வாழ்க்கை அந்த படத்தில் உள்ளது எனவும் இயக்குநர் கஸ்தூரி ராஜா தெரிவித்துள்ளார்.

ரவாளி திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள லீ மேஜிக் லான்டர்ன் திரையரங்கில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக இயக்குநர் கஸ்தூரிராஜா, நடிகர்கள் ஜெயபிரகாஷ், கஞ்சா கருப்பு, அப்புக்குட்டி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த இயக்குநர் கஸ்தூரிராஜா “தாமரை இலக்கியம் என்பது நான் எழுதிய முதல் புத்தகம். தமிழ் மொழியின் பெருமை பழமை கலாச்சாரம் என அனைத்தையும் அதில் எழுதி உள்ளேன் தமிழனின் வாழ்வியல் என்பதுதான் பாமர இலக்கியம்.

நானே வருவேன் திரைப்படத்திற்காக நானும் எக்சைட்மெண்டாக இருக்கிறேன். என் இரண்டு குழந்தைகளின் வாழ்க்கை அதில் உள்ளது. அந்த படம் நல்லா வர வேண்டும் வெற்றி பெற வேண்டும் என்பது எனக்கும் உள்ளது. பெரிய படங்களாக இருந்தாலும் சரி சிறிய படங்களாக இருந்தாலும் சரி மூன்று நாட்கள் தான் அதன் வாழ்க்கை. படம் வருவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பே ரிவ்யூ எழுத வேண்டும்.

தனுஷ் அவரது மனைவி மீண்டும் ஒன்று சேர்வார்களா என்ற கேள்விக்கு இது எனக்குச் சம்பந்தமில்லாத கேள்வி இதைக் கேட்க வேண்டாம். அநாகரிகமான கேள்விகளைக் கேட்க வேண்டாம் சாரி. சிறிய பட்ஜெட் பெரிய பட்ஜெட் என்று இல்லை கண்டெண்ட் தான் முக்கியம். மீண்டும் படம் இயக்க உள்ளேன் எனக்கு சினிமா மட்டும் தான் தெரியும். தனுசுக்குக் கதை சொல்லும் அளவுக்கு எனக்குச் சிந்திக்கத் தெரியவில்லை அவருக்காக யோசிக்க நிறையப் பேர் உள்ளனர்” எனப் பேசினார்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

சென்னையில் விடிய விடிய கனமழை!! அடுத்த 3 மணிநேரத்திற்கு மழை தொடரும்

G SaravanaKumar

திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்படும் – அமைச்சர்

Halley Karthik

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் காலமானார்

Jayakarthi