6-ம் வகுப்பு மாணவி உலக சாதனை!

படுத்துக்கொண்டு ஒற்றைக்காலில் ஹூலா ஹூப் (hula hoop) வளையத்தை ஒரு நிமிடத்தில் 297 முறை சுற்றி, 6ஆம் வகுப்பு மாணவி உலக சாதனை படைத்துள்ளார். கேரளாவின் திருவனந்தபுரத்தை சேர்ந்த 11 வயது சிறுமி தீக்-ஷிதா,…

படுத்துக்கொண்டு ஒற்றைக்காலில் ஹூலா ஹூப் (hula hoop) வளையத்தை ஒரு நிமிடத்தில் 297 முறை சுற்றி, 6ஆம் வகுப்பு மாணவி உலக சாதனை படைத்துள்ளார்.

கேரளாவின் திருவனந்தபுரத்தை சேர்ந்த 11 வயது சிறுமி தீக்-ஷிதா, சென்னையில் ஹூப்பர்ஸ் என்ற பயிற்சி மையத்தில் ஹூலா ஹூப் (hula hoop) பயிற்சியை மேற்கொண்டு வந்தார். கடந்த 3 மாதங்களாக ஆன்லைன் மூலம் கடுமையான பயிற்சி பெற்று வந்த தீக்-ஷிதா, படுத்துக்கொண்டு ஒற்றைக்காலில் ஹூலா ஹூப் (hula hoop) வளையத்தை ஒரு நிமிடத்தில் 297 முறை சுற்றி சாதனை படைத்துள்ளார்.

இதனை அங்கீகரிக்கும் விதமாக, யுனிவர்சல் புக் ஆப் ரெக்கார்ட்ஸின் நிறுவனர் டாக்டர் பாபு பாலகிருஷ்ணன் சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கி, சிறுமி தீக்-ஷிதாவை கௌரவித்தார். ஏற்கனவே ஹூலா ஹூப் (hula hoop) வளையத்தை ஒரு நிமிடத்தில் 235 முறை சுற்றி, இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸில் தீக்-ஷிதா இடம்பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.