தமிழ்நாட்டில் முதன்முறையாக ஆட்டோ வடிவிலான மினி ஆம்புலன்ஸ் சேவையை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
நீலகிரி மாவட்டத்தில் தனியார் அமைப்புகள் ஒன்றிணைந்து பல்வேறு நிறுவனங்களின் பங்களிப்புடன் புதிய நவீன கருவிகளுடன் கூடிய 6 ஆட்டோ மினி ஆம்புலன்ஸ்களை உருவாக்கியுள்ளன. இந்த ஆம்புலன்ஸ் சேவையை வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் கொடியசைத்து துவக்கி வைத்தார். பின்னர் பேசிய அவர், இதேபோல் பல்வேறு தன்னார்வ அமைப்புகள் தமிழ்நாடு அரசுடன் இணைந்து உதவிகள் செய்வதற்கு முன்வர வேண்டும் என கேட்டுக்கோண்டார். சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுக்கும் வகையில், தமிழ்நாடு முழுவதும் இரண்டரை கோடி மதிப்பில் மரக்கன்றுகளை நடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்