திருப்பதியில் பக்தர்கள் திடீர் போராட்டம்!

இலவச தரிசனத்திற்காக வைகுண்டம் காத்திருப்பு மண்டபத்திற்குள் அனுமதிக்க கோரி திருப்பதி மலையில் பக்தர்கள் போராத்தில் ஈடுபட்டனர். டிசம்பர் 23ஆம் தேதி முதல் ஜனவரி ஒன்றாம் தேதி வரை வைகுண்டம் காத்திருப்பு மண்டபங்கள் வழியாக நடைபெறும்…

இலவச தரிசனத்திற்காக வைகுண்டம் காத்திருப்பு மண்டபத்திற்குள் அனுமதிக்க கோரி திருப்பதி மலையில் பக்தர்கள் போராத்தில் ஈடுபட்டனர்.

டிசம்பர் 23ஆம் தேதி முதல் ஜனவரி ஒன்றாம் தேதி வரை வைகுண்டம் காத்திருப்பு மண்டபங்கள் வழியாக நடைபெறும் நேரடி இலவச தரிசனத்தை தேவஸ்தான நிர்வாகம் ரத்து செய்துள்ளது.  இலவச தரிசன டோக்கன்கள், 300 ரூபாய் தரிசன டிக்கெட்டுகள், ஸ்ரீவானி அறக்கட்டளை தரிசன டிக்கெட்டுகளுடன் வரும் பக்தர்களுக்கு மட்டுமே தரிசன அனுமதி கிடைக்கும் என தெரிவித்தருந்தது.

இந்நிலையில்,  காத்திருப்பு மண்டபத்தில் இருக்கும் 32 அறைகளிலும் பக்தர்கள் நிரம்பி உள்ளனர்.  இதனால்,  புதிதாக வரும் பக்தர்களை காத்திருப்பு மண்டபங்களுக்குள்
அனுமதிக்க இயலாது என அறிவித்திருந்தனர்.  இந்நிலையில், புதிதாக வரும் பக்தர்களை
தேவஸ்தான விஜிலென்ஸ் துறையினர் தடுத்து நிறுத்துகின்றனர்.

இதனால்,  தொலைதூரத்தில் இருந்து வந்திருக்கும் பக்தர்கள் அடுத்து என்ன செய்வது என்று புரியாத நிலையில் திருப்பதி மலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் நிலைமையை விளக்கி கூறும் முயற்சியில் தேவஸ்தானம் துறையினர்
தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.