26.7 C
Chennai
September 24, 2023
முக்கியச் செய்திகள் தமிழகம்

ஆராய்ச்சி மாணவர்களின் கல்வித் திறன் மேம்பாடு: 5 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து

ஆராய்ச்சி மாணவர்களின் கல்வித் திறனை மேம்படுத்த தமிழ்நாட்டின் பல்வேறு கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களுக்கும் டைசல் நிறுவனத்திற்கும் இடையே முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் 5 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது.

உயிரி தொழில்நுட்பக்கல்வி மற்றும் ஆராய்ச்சி மாணவர்களின் கல்வித் திறனை மேம்படுத்த தமிழ்நாட்டின் பல்வேறு கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களுக்கும் டைசல் நிறுவனத்திற்கும் இடையே 5 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை சார்பில் ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டது.

ரூ 48.07 கோடி செலவில் சிப்காட் நிறுவனத்தின் சிறுசேரி தகவல் தொழில்நுட்பப் பூங்காவில் அமைந்துள்ள ஏற்றுமதி வணிக வசதி மையம், பெருந்துறையில் அமைந்துள்ள ஆண்கள் தங்கும் விடுதி மற்றும் சிறுசேரி & இருங்காட்டுக்கோட்டை தொழிற்பூங்காக்களில் அமைந்துள்ள தீயணைப்பு நிலையங்களையும் காணொலி வாயிலாக திறந்து வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்.

ஒரகடம் மருத்துவ சேவைப் பூங்காவின் ஒதுக்கீட்டு ஆணையினை  முதலமைச்சர் வழங்கினார். இந்நிகழ்வில், தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமைச் செயலாளர் இறையன்பு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to TelegramShare to Print

Related posts

சென்னையில் மக்கள் பார்வைக்காக வைக்கப்பட உள்ள உலகக் கோப்பை..!!

Web Editor

கேரளாவில் பிடிப்பட்ட 2500 கிலோ போதைப்பொருள் எதிரொலி; தமிழக கடலோர மாவட்டங்களில் கண்காணிப்பு பணிகள் தீவிரம்…

Web Editor

டெல்லியில் இன்று முதல் முழு ஊரடங்கு: என்னென்ன கட்டுப்பாடுகள்?

Halley Karthik