இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 16,519 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 28 பேர் உயிரிழந்துள்ளனர்.
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில், கடந்த சில மாதங்களாக தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. தொற்று பரவலை குறைக்கும் வகையில், அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பொதுமக்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் 13,086 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 16,159 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4 கோடியே 35 லட்சத்து 34 ஆயிரத்து 723 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 28 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்து 25 ஆயிரத்து 268ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 15,394 பேர் குணமடைந்துள்ளனர். இதையடுத்து, குணமடைந்தோர் எண்ணிக்கை 4 கோடியே 29 லட்சத்து 7 ஆயிரத்து 327ஆக உயர்ந்துள்ளது.
-ம.பவித்ரா







