“மாநில அரசின் ஒத்துழைப்பு இல்லாமல் வளர்ச்சி சாத்தியமில்லை” – மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்!

இந்திய அரசு தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு முழுமையாக உறுதிபூண்டுள்ளது என்று மு.க.ஸ்டாலினுக்கு மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதில் அளித்துள்ளார்.

மத்திய ரயில்வேதுறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “கடந்த 2014 ஆம் ஆண்டிலிருந்து மாநிலத்திற்கான பட்ஜெட் ஒதுக்கீடு 8.5 மடங்குக்கும் மேலாக அதிகரித்து, 2026-27 ஆம் ஆண்டில் 7,611 கோடியாக உயர்ந்துள்ளது.

ஒத்துழைப்பு இல்லாமல் வளர்ச்சி சாத்தியமில்லை எனக் கூறியுள்ள அஸ்வினி வைஷ்ணவ் தற்போதைய ரயில்வே திட்டங்களுக்குத் தேவையான 4,326 ஹெக்டேர் நிலத்தில் 1,052 ஹெக்டேர், அதாவது 24% மட்டுமே தமிழக அரசால் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

நிலம் கையகப்படுத்துவதற்காக தமிழக அரசுக்கு ஏற்கனவே 1,465 கோடி வழங்கப்பட்டுள்ளது. மாநில அரசிடம் நிலம் கையகப்படுத்தும் பணிகள் நிலுவையில் உள்ளதால், பல முக்கிய திட்டங்கள் தாமதமாகி வருகின்றன என அமைச்சர் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், ராமேஸ்வரம் – தனுஷ்கோடி புதிய ரயில் பாதை திட்டத்திற்கான அடிக்கல் 2019-ம் ஆண்டு பிரதமரால் நாட்டப்பட்டது.

ஆனால், தமிழ்நாட்டின் ஒத்துழைப்பின்மை காரணமாக, இந்தத் திட்டத்தில் நிலம் கையகப்படுத்தும் பணி இன்னும் தொடங்கப்படவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.